விசா' தடை நீக்கம் எப்போது?
03 Mar,2021
'விசா' வழங்கும் நடைமுறை மற்றும் 'கிரீன் கார்டு' எனப்படும், நிரந்தர குடியுரிமை வழங்குவது தொடர்பாக, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்பின் பல்வேறு உத்தரவுகளை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீக்கி வருகிறார்.
ஆனால், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு வழங்கப்படும், 'எச் 1பி' விசாவுக்கான தடையை நீக்குவது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நீட்டிக்கப்படாவிட்டால், அந்தத் தடை, வரும், 31ம் தேதியுடன் காலாவதியாகிவிடும்.
இது குறித்த கேள்விக்கு, ''பல்வேறு முக்கிய பிரச்னைகள் உள்ளன. விசா நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால், இந்தத் தடையை முன்னதாகவே நீக்குவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை,'' என, அமெரிக்க உள்துறை அமைச்சர், அலஜான்ட்ரோ மயார்கஸ் கூறியுள்ளார்