ஜோ பிடன் சூப்பர் அறிவிப்பு.. இந்தியர்கள் மகிழ்ச்சி..!
25 Feb,2021
அமெரிக்காவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் வர்த்தக முடக்கம் காரணமாகப் பல கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப்
பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் பல உத்தரவுகளைப் புதிய அதிபரான ஜோ பிடன் ரத்து செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு கட்டுப்பாட்டையும் ரத்துச் செய்து அசத்தியுள்ளார். டிரம்ப் அரசின் உத்தரவுகள் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க வேலைவாய்ப்புகளை பிற நாட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகக் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்துள்ளவர்களை அமெரிக்கா வரத் தடை விதித்தது. இதனால் வெளிநாட்டில் இருக்கும் பல லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவிற்குத்
திரும்ப முடியாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் இதேவேளையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு விமானச் சேவைகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் வெளிநாடுகளில் இருப்போர் அமெரிக்காவில் இருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பைடன் அரசு முடிவு தற்போது புதிதாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன், டிரம்ப் அரசு விதித்துள்ள இந்தத் தடையும், தடைக்கான காரணத்தையும் ஏற்க முடியாது.
இந்தத் தடையால் பல கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் காரணத்தால் இந்த உத்தரவை ரத்து செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் தளர்வு டிரம்ப் ஆட்சியில் குடியிருப்பு விதிகள் எப்போதும் இல்லாமல் மிகவும் கடுமையாக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்களும், அமெரிக்கச் செல்ல காத்திருக்கும் வெளிநாட்டவர்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர், ஆனால் பைடன் அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் நிலையில் இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது