மாநில அரசு கழுதைகளை இத்தகைய கும்பல்களிடமிருந்து காக்க வேண்டும் என்றும் பொதிசுமக்கும் பரிதாபத்துக்குரிய இந்த விலங்கு டின்னர் பிளேட்டில் இறைச்சியாக முடியக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் கழுதை இறைச்சிக்கான கிராக்கி அதிகரித்துள்ளது, இதனையடுத்து கழுதைகள் பெரிய அளவில் கொல்லப்படுவதாக அங்கிருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர் ஆகிய மாவட்டங்களில் இறைச்சிக்காக கழுதைகளை கொல்வது அதிகமாகியுள்ளது. ஆனால் கழுதை ‘உணவு விலங்கு’என்பதாக பதிவு செய்யப்படாத விலங்காகும், எனவே இதனை அடித்துச் சாப்பிடுவது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் படி சட்ட விரோதமாகும்.
கழுதை இறைச்சி உடல் வலுவையும் ஆண்மை வீரியத்தை அதிகரிப்பதாகவும் நம்பப்படுவதால் அதிக அளவில் ஆந்திராவில் கழுதைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது சட்டவிரோதம் என்பதால் ஆங்காங்கே போதை பொருள் போல் தெரியாமல் அரசல் புரசலாக விற்கப்படுகிறது, இதனால் கிலோ ரூ.2000 வரை கழுதை இறைச்சி விற்கப்படுகிறதாம்.
ஒரு கழுதையின் விலை ரூ.10,000 முதல் 15,000 வரை இருக்கலாம். செப்டம்பர் 2013-ல் மும்பையிலிருந்து ஆந்திராவுக்குக் கடத்தப்பட்ட 8 கழுதைகளை போலீஸார் கைப்பற்றியதும் கவனிக்கத்தக்கது.
2012 முதல் கழுதைகள் எண்ணிக்கை 60% குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2019 கணக்கின் படி இந்தியாவில் 1.2 லட்சம் கழுதைகள் இருக்கின்றன.கழுதைப்பால் குறித்த வதந்திகளினால் கழுதைப்பால் குடிப்போர் இருக்க, கழுதை இறைச்சிக்கான கிராக்கி அது வீரியத்தை அதிகரிக்கும் என்ற வதந்தியினால் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திராவில் கிரிமினல் கும்பல் இந்த கழுதை இறைச்சி வியாபாரத்தை நடத்தி வருவதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஒருகும்பல் கழுதைகளைக் கடத்தி வருவதும் இன்னொரு கும்பல் அதை அடித்து இறைச்சி தயாரிப்பதுமாக வியாபாரம் கன ஜோராக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக காகிநாடாவில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கழுதை இறைச்சி விற்கப்படும் இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அது உண்மை என தெரியவரவே முறையான அதிகாரி ஒருவரிடம் புகார் எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “ மாநில அரசு கழுதைகளை இத்தகைய கும்பல்களிடமிருந்து காக்க வேண்டும் என்றும் பொதிசுமக்கும் பரிதாபத்துக்குரிய இந்த விலங்கு டின்னர் பிளேட்டில் இறைச்சியாக முடியக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த அதிர்ச்சித் தகவல்களை அடுத்து கழுதை இறைச்சி விற்பனை கும்பலைப் பிடிக்க போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.