மீண்டும் பறக்கும் 'ஜெட்' விலை உயர்வு
23 Feb,2021
, 4 - 6 மாதங்களில், 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனம் மீண்டும் விமான சேவையை துவக்க உள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, அதன் பங்கு விலை, 5 சதவீதம் அதிகரித்தது.
நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் நெருக்கடி காரணமாக, 2019, ஏப்ரலில் விமான சேவையை நிறுத்தியது.
நடவடிக்கை : அத்துடன், திவால் சட்டத்தின் கீழ், கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. இந்நிறுவனத்தை, தொழிலதிபர், முராரி லாலா ஜலான் தலைமையிலான, ஜலான் - கல்ராக் அமைப்பு ஏற்க முன்வந்து உள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நேற்று பரிசீலித்தது. இது குறித்து, முராரி லாலா ஜலான் கூறியதாவது:இந்திய விமான துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும்.
கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்த பின், அடுத்த, 4 - 6 மாதங்களில், விமான சேவை துவங்கப்படும். அதிகபட்ச வரம்புதுவக்கத்தில், 25 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த தகவல் வெளியானதை அடுத்து, நேற்று காலை, மும்பை பங்குச் சந்தையில், ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை, 4.98 சதவீதம் உயர்ந்து, 114.95 ரூபாய் என்ற அதிகபட்ச வரம்பை எட்டியது