700 கோடி மதிப்பில் ஊழியர்களுக்கு ஸ்பெஷல் போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல்
08 Feb,2021
ஹெச்.சி.எல் நிறுவனமானது ரூபாய் 700-கோடி மதிப்பில் தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 1.59 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 பில்லியன் டாலர் வருவாய்; ரூ. 700 கோடி மதிப்பில் ஊழியர்களுக்கு ஸ்பெஷல் போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல்HCL
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை கடந்த 2010-ம் ஆண்டு ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், ஹெச்.சி.எல் நிறுவனமானது ரூபாய் 700-கோடி மதிப்பில் தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 1.59 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெச்.சி.எல் நிறுவனமானது சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹெச்.சி.எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எங்களுடைய ஊழியர்கள்தான் எங்களின் மிகவும் மதிப்புமிக்க சொத்து. கடுமையான கொரோனா பாதிப்பு காலத்திலும் ஒவ்வொரு ஊழியரும் மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆர்வமுடனும் பணியாற்றினர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இது அதிக பங்காற்றியுள்ளது.
10 பில்லியன் டாலர் வருவாய் எனும் மைல்கல்லை ஹெச்.சி.எல் நிறுவனம் எட்டியுள்ளது. இதன்மூலம் சுமார் 1.59 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு போனஸ் வழங்க உள்ளோம். எங்களது ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதரவிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஊழியர்களுக்கு இந்த ஸ்பெஷல் போனஸ் ஆனது பிப்ரவரி மாதத்திற்குள் வழக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.