எழுவர் விடுதலையில் குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் - ஆளுநர் தரப்பு
04 Feb,2021
எழுவர் விடுதலையில் மத்திய அரசு, ஜனாதிபதி க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்தது.
இதை தொடர்ந்து எழுவர் விடுதலையில் மத்திய அரசு, ஜனாதிபதி க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என ஆளுநர் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை 2 ஆண்டுகள் கழித்து ஆளுநர் நிரகாரித்துள்ளார்.