24 மணி நேரத்தில் 107 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா
04 Feb,2021
பல்வேறு உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் வேகம் குறைந்து விட்டது. 15 ஆயிரத்துக்கு குறைவான புதிய தொற்றுகளும், 150-க்கு குறைவான மரணங்களுமே தினசரி நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில், இன்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 12 ஆயிரத்து 899 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,90,183 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.13% உயிரிழப்பு விகிதம் 1.43% ஆக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 107 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,965லிருந்து 1,54,703 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 1.55 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாடுமுழுவதும் மொத்தம் 44,49,552 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.