கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
22 Jan,2021
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஆஷா என்ற பணியாளர் கடந்த 19-ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது செவிலியர் ஒருவர் 16-ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அன்று முதல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன