அருணாச்சலில் ஊடுருவி புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளதா சீனா?
18 Jan,2021
புதுடில்லி: அருணாச்சல பிரதேசதத்தில் நம் எல்லைக்குள் உட்பட்ட 4.5 கி.மீ. பகுதியில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதி பல ஆண்டுகளாக இந்தியா -சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.இங்கு நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
100-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய இந்த கிராமத்தின் செயற்கை கோள் புகைபடத்தை கடந்த ஆண்டு தனியார் டி.வி. வெளியிட்டது. இந்த செயற்கைகோள் புகைபடத்தை பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் தற்போது உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் இதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைபடத்தில் புதிய ஆக்கிரமிப்பு எதுவும் தென்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய கிராமம் உருவாகி இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர். இது நமக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., தபிர் கவோ சீன ஆக்கிரமிப்பை உறுதி செய்துள்ளார்.