மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
18 Jan,2021
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மசூதி கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட இந்திய, இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தனிப்பூா் மசூதி திட்டப் பணிகளை குடியரசு தின கொண்டாட்டங்களுடன் தொடங்க ஐஐசிஎஃப் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அயோத்தி மாவட்ட வாரியத்திடம் மசூதி கட்டுமான திட்டத்துக்கு அனுமதி பெற விண்ணப்பித்து, மண் பரிசோதனை பணிகளை தொடங்குவதன் மூலம் திட்டப் பணிகளை முறைப்படி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனிப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் 15 ஆயிரம் சதுர அடியில் மசூதி கட்டப்படும் என்றும், இந்த மசூதி பாபா் மசூதியின் அளவில் கட்டப்படும் என்றும் ஐஐசிஎஃப் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.