100 யார் தூரத்தில் சீனாவின் டாங்கிகள்-
16 Jan,2021
இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் மீண்டும் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. சீனா இந்திய எல்லை ஓரமாக பல டாங்கிகளை கொண்டு வந்து நிறுத்தியுள்ளதோடு. சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அடித்து, சுமார் இந்திய எல்லையில் இருந்து 100 யார் தூரத்தில் தங்கி உள்ளார்கள். இதனால் பெரும் பதற்றம் அடைந்த இந்தியா அதே இடத்தில் தனது படைகளை முன் நகர்த்தியுள்ளதோடு.
இந்திய படை வீரர்களையும் கூடாரம் அடிக்கச் சொல்லி தங்க வைத்துள்ளது. அங்கே உடனடியாக டாங்கிகள் நகர்த்தப்பட்டு. சீன ராங்கிகளை எதிர்கொள்ள தயாரான ஒரு நிலைக்கு வந்துள்ளதாக சற்று முன்னர் ருயிட்டர்ஸ் செய்திச் சேவை அறிவித்துள்ளது.
ஒரு சீன ரானூவ வீரர் சுட்டால் கூட பெரும் போர் ஆரம்பிக்கும் பரபரப்பான சூழ் நிலை உருவாகியுள்ளது. சீனாவின் அதி நவீன ராங்கிகளை இந்தியா சமாளிக்குமா என்பதில் பெரும் அச்சம் நிலவுகிறது. போதாக் குறைக்கு சீனாவின் ஆளில்லா விமானங்களும் அருகே பறந்து பெரும் பரபரப்பை தோற்று வித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் தான் ஆணிகள் பொருத்தப்பட்ட உருட்டு கட்டையால், சீன ராணுவம் தாக்கி 22 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தை கொன்றார்கள். அது போல உருட்டு கட்டை ரிரீட்மென்ட் ஏதாவது கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.