இலங்கை நோக்கி படையெடுக்கப்போகும் வெளிநாட்டு தமிழர்கள்!
16 Jan,2021
ஏற்றி கச்சத்தீவு நோக்கிச் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1976 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித் சங்கத்தின் தலைவர் யேசுராஜா தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் வரும் 23ஆம் திகதி மீன்பிடி விசைப் படகுகளில் கறுப்புக் கொடி முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 தமிழக மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனினும், இந்திய மீனவர்களின் நான்கு விசைப் படகுகளையும் அரசுடமை செய்வதாக ஊற்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்தே இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.