மோடியை விமர்சனம் செய்து டுவிட் போட்ட பைலட் பணிநீக்கம்!
10 Jan,2021
மோடியை விமர்சனம் செய்து டுவிட் போட்ட பைலட் பணிநீக்கம்!பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்விட் ஒன்றை பதிவு செய்த பைலட் ஒருவரை விமான நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோ ஏர் என்றா விமான நிறுவனத்தில் பைலட் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் தனது தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்
இந்த டுவீட் வைரல் ஆன நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட்டரில் பதிவு செய்தவரை பணிநீக்கம் செய்வதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர் வெளிப்படுத்திய தனிப்பட்ட கருத்துக்கு விமான நிறுவனம் பொறுப்பேற்காது எனவும் இந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது
பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவீட்டை பதிவு செய்த பைலட் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது