உள்நாட்டு விமான போக்குவரத்து வழமைக்கு திரும்புவது குறித்த அறிவிப்பு!
08 Jan,2021
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2- 3 மாதங்கள் ஆகலாம் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ கொரோனாவால் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2 முதல் 2 மாதங்கள் கூட ஆகலாம்.
எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவை நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அறிவித்த தடை இன்றுடன் நிறைவடைகின்றது!
இங்கிலாந்து, தென்னாபிரிக்கா நாடுகளின் விமானப் போக்குவரத்து மீது மத்திய அரசு விதித்த தடை இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்தநிலையில் குறித்த தடையை இம்மாதம் இறுதி வரை நீடிக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் பரவிய வீரியம் மிக்க புதிய கொரோனா தொற்று வேகமாக ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகிறது.
இந்நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு இன்று வரை தடைவிதித்துள்ளது.
இத்தடையை நீக்கக்கூடாது என பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.