இறுதி சடங்கின் போது நேர்ந்த விபரீதம்: 17 பேர் உடல் நசுங்கி பலி!
03 Jan,2021
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் வசித்துவந்த ராம்தான் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, ராம்தானின்ன் உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்வதற்காக முரத்நகரில் உள்ள இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றனர். 50-க்கும் அதிகமானோர் இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ராம்தானின் உடல் தகனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்துள்ளது.

மழை பெய்ததையடுத்து, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தகன மேடை அமைந்துள்ள பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், தகன மேடையின் மேற்கூரை பாழடைந்து இருந்தது, அதில் புனரமைப்பு நடைபெற்று பாதிப்பணிகள் முடிவந்த நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக அந்த தகன மேடையின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த ராம்தானை தகனம் செய்ய வந்து மழை காரணமாக தகன மேடையில் நின்றுகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்பு படையினரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த நபரை தகனம் செய்ய சென்றவர்கள் தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்தத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.