இந்தியாவில் புதியவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25ஆக உயர்வு
31 Dec,2020
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரசாக உருவெடுத்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பயணிகளை கண்டறியும் பணிகளை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது
புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்து ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக புனேவில் 4 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் புதியவகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 25 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.