இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயம்? இந்தியா வந்த ஆறு பேருக்கு கொரோனா உறுதி
29 Dec,2020
இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தீரமாக ஈடுபட்டுள்ளது.
முன்னதாக இங்கிலாந்தில் இருந்து பெங்களூருக்கு திரும்பிய 1,536 பேரில் மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி
இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா-இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை இங்கிலாந்தில் இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.