பிரித்தானியாவில் இருந்து இந்தியா வந்த 22 பேருக்கு கொரோனா!
26 Dec,2020
பிரிட்டனில் இருந்து கர்நாடகா திரும்பிய 14 பேருக்கும், கேரளா திரும்பிய 8 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள், பிரிட்டனில் பரவும் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய, ரத்த, சளி மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: பிரிட்டனில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராய, அவர்களின் ரத்த, சளி மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகோழிக்கோட்டில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், கொரோனா வைரசில் சிறிய அளவில் உருமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறோம். ஆனால், பிரிட்டனில் ஏற்பட்ட உருமாற்றம் போல் வைரசில் மாற்றம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
1,638 பேருக்கு பரிசோதனைகர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், பிரிட்டனில் இருந்து கர்நாடகாவிற்கு திரும்பிய 2,500 பேரில் 1,638 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 14 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவர்கள், பிரிட்டனில் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது பற்றி ஆராய, அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.