இன்றைய ' கிரைம்
22 Dec,2020
* காஷ்மீர் குல்கம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 2 பேர் சரண் அடைந்தனர்
* கேரள மாநிலம் கோட்டயத்தில் கன்னியாஸ்திரி அபயா கடந்த 1992 ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சிபிஐ விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தது. பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது. 28 ஆண்டுக்கு பின் இன்றைய தீர்ப்பை மக்கள் வரவேற்றனர்.
* மத்தியபிரதேசம் மாநிலத்தின் கன்டவாஸ் கோத்வாலி போலீஸ் ஸ்டேஷனில் போலீசில்புகார் ஒன்று பதிவானது. சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் 5 நாட்களில் 2 பெண்களை திருமணம் செய்து மாயமானார். போலீசார் தேடி வருகின்றனர்.
* ரூ. 46 லட்சம் ஏடிஎம் கார்டு மூலம் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் வினோத் குண்டர் சட்டத்தில் கைது.
* மும்பையில் கொரோனா விதிமுறைகளை மீறி மதுபாரில் ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ரெய்னா மீது வழக்கு.
latest tamil news
* உ.பி., மாநிலம் ஆக்ரா அருகே வாகனங்கள் மோதிக்கொண்டதில் தீ பற்றி எரிந்தது. இதில் 5 பேர் கருகி பலியாயினர்.
* பீஹாரில் இருந்து கடத்தி திருச்சியில் விற்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு. தரகர்களுக்கு வலைவீச்சு.
தமிழக நிகழ்வு !
* மதுரையில் ஆசிரியையிடம் லாட்டரி விழுந்துள்ளதாக பல கோடி தருவதாக 20 லட்சம் மோசடி செய்த ஷியாம்லால் என்பவர் கைது.
* ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே விவாகரத்து மனு தாக்கல் செய்த மனைவி சிவபாலாவை கணவர் சரவணன் வெட்டி கொன்றார்.
* மயிலாடுதுறை மணல்மேடு என்ற பகுதியில் ஆசிரியை ஜானகியை கழுத்தை அறுத்து கொலை செய்து 10 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.