இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
20 Dec,2020
இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, கிறிஸ்துமசை ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை மாற்றி, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை நேற்று முதல் விதித்திருக்கிறது.
பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காக அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது. சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல் தலைமையிலான, சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு, இந்த கூட்டத்தை நாளை நடத்துகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியும், கூட்டு கண்காணிப்புக் குழுவின் இந்தியப் பிரதிநிதியுமான டாக்டர் ரோடெரிக்கோ எச் ஓப்ரினும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிகிறது.