விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் அற்புத காட்சி
17 Dec,2020
சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள உள்ள வீரர்கள் அங்கிருந்தபடி பளிச்சிடும் இமயமலையினை படம் எடுத்துள்ளனர். அப்புகைப்படம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கவர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று இமயமலை. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் 5 கோடி ஆண்டு கால மோதலின் விளைவாக உருவானது இம்மலைத் தொடர். சர்வதேச விண்வெளி நிலையம் இமயமலைக்கு மேலே சுற்றி வந்த போது அங்குள்ள வீரர் ஒருவர் இந்த அரிய காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார். இதனை நாசா தங்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
இப்படம் குறித்து நாசா கூறியுள்ளதாவது: பனி மூடிய இமயமலை இந்த படத்தில் அற்புதமாக உள்ளது. படத்தின் வலதுபுறத்தில் வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விவசாய வளமிக்க பகுதி உள்ளது. படத்தின் இடதுபுறம் உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்திய பீடபூமி வறண்டு காணப்படுகிறது. இந்தியாவின் புதுடில்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் ஆகியவற்றின் பிரகாசமான நகர விளக்குகளும் தெரிகின்றன. வளிமண்டல துகள்கள் சூரிய கதிர்வீச்சுக்கு வினைபுரிந்து ஒளிரும் ஆரஞ்சு நிறம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளன