சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டிருக்கும்!
29 Oct,2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ரத்து நடவடிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த மார்ச் 23ஆம் திகதி முதல் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 25 ஆம் திகதி உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும் வழமையான சர்வதேச விமான சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டன. அக்டோபர் 31ஆம் திகதியுடன் சர்வதேச விமான சேவை இரத்து நடவடிக்கை நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில் இது குறித்த அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது