இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் அபாயம் துவங்கியதும், மார்ச், 22 முதல், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, இரண்டுமே ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரக அனுமதியின் பேரில், சரக்குப் போக்குவரத்துக்கான விமானங்கள் இயங்கி வருகின்றன.

மே, 25 முதல், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மட்டும், துவங்கியது.இதற்கிடையில், வெளிநாடுகளில் தவித்த ஏராளமான இந்தியர்கள், 'வந்தே பாரத்' திட்டம் வாயிலாக, பல்வேறு மாநிலங்களுக்கு, சிறப்பு விமானங்கள் மூலம், அழைத்து வரப்பட்டனர். இதுதவிர, வழக்கமான போக்குவரத்து துவங்கும் வரை, சில குறிப்பிட்ட நாடுகளுக்கிடையில் போக்குவரத்தை தடையின்றி நீடிக்க, தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு, குறிப்பிட்ட வழித்தடங்களில், தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில், விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா ஊரடங்கு, நவம்பர் மாதம் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து, சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடையும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட நாடுகளுக்கான அனுமதிக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் மட்டும், பயணிகள் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.