தனி விமானம்ஸ ஐந்து பெண்கள்ஸ இன்பச் சுற்றுலாஸ ஆனால் விசாரணையில் சிக்கினார் !
22 Oct,2020
அக்டோபர் இரண்டாவது வாரத்தில், ஆளும்கட்சி அரசியல்புள்ளியின் வாரிசு ஒருவர் தன் நண்பர்களுடன் மாலத்தீவுக்கு ‘இன்ப’ச் சுற்றுலா சென்றுள்ளார். தனி சொகுசு விமானத்தில் மாலத்தீவு சென்ற வாரிசு பிரமுகர், பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்வது தொடர்பாகவும் பேசி முடித்தாராம். ஐந்து நாள்களில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிவிட்ட அந்த வாரிசை தற்போது மத்திய உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது.
அரசியல்வாதிகளின் வாரிசுகள் டூர் அடிப்பது சகஜம்தானே?
பிரச்னை அதுவல்ல. சென்னையிலிருந்து வாரிசு பிரமுகரின் சொகுசு விமானம் கிளம்பிய அடுத்த இரண்டு மணி நேரத்தில், மற்றொரு சொகுசு விமானம் கிளம்பியுள்ளது இதி ஐந்து பெண்கள் சென்றார்களாம். இந்தப் பெண்களில் ஒருவர் பயங்கரவாத தொடர்புடைய கேரளாவின் அரசியல் கட்சிக்கு நெருக்கமானவராம். மல்லிகைப்பூவை பெயரில் சூட்டியிருக்கும் அந்தப் பெண்மணி, கேரள அரசியல் கட்சிக்காக நிதி திரட்டும் வேலையைச் சென்னையில் செய்துவருகிறார். இரு தரப்பும் மாலத்தீவில் சந்திப்பு நடத்தியதா, பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுபவருடன் வாரிசுக்கு என்ன வேலை என்றெல்லாம் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது மத்திய உளவுத்துறை.
இதனால், இன்பச் சுற்றுலா ‘துன்ப’ச் சுற்றுலாவாக மாறி வாரிசுக்குக் குடைச்சல் கொடுக்கக்கூடும் என்கிறார்கள்.” “அடேங்கப்பாஸ”