தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய பிரித்தானிய நீதிமன்றம்: உச்சகட்ட மகிழ்ச்சியில் சீமான்!
21 Oct,2020
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான பிரித்தானியாவின் தடையை எதிர்த்து நாடு கடந்த தமிழீழ அரசு மேன்முறையீடு வழக்கில் பிரித்தானியா நேரப்படி இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதிருந்த தடை தவறானது என பிரித்தானியா நீதிமன்றம் அறிவித்தது. விடுதலைப் புலிகள் மீதான முழுமையான தடை நீக்கம் தொடர்பான பிரித்தானிய அரசாங்கதின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரித்தானியா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சீமான் ட்விட்டர் பதிவிட்டதாவது, பிரித்தானியா நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட இனமானத் தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தடை நீக்கத்தை முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம். தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!! என சீமான் பதிவிட்டுள்ளார்.