உயிருடன் சவப்பெட்டியில்.. அத்தனை பாடுபட்டு மீட்டும் வீணா போச்சே..
16 Oct,2020
பரிதாபமாக உயிரிழந்த சேலம் முதியவர்
உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்... இதையடுத்து சேலம் பகுதியே அதிர்ச்சி கலந்த சோகத்தில் மூழ்கி உள்ளது. சேலம் மாவட்டம் சந்தபட்டியில் வசித்து வந்தவர் பாலசுப்ரமணிய குமார்... 78 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர்.. இவரது தம்பி சரவணன். அவருக்கு 70 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக, பாலசுப்ரமணிய குமாருக்கு உடல்நிலை சரியில்மல் போகவும், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு,
பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக சவப்பெட்டிக்கு சரவணன் ஆர்டர் தந்துள்ளார்.. அத்துடன், உயிருடன் இருந்த அண்ணனை தூக்கி சவப்பெட்டியிலும் வைத்துள்ளார் சரவணன்.. மேலும் அவரது கைகளை கயிறுகளால் இறுக்கமாக கட்டிப்போட்டிருந்தார். சவப்பெட்டிக்குள் பாலசுப்ரமணிய குமாரின் உடல் அசைந்து கொண்டிருப்பதை பார்த்த ஊழியர்கள் அதிர்ந்து போய், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தந்தனர்.. கிட்டத்தட்ட 5 மணி நேரம் கை, கால் அசைக்க முடியாமல், பெட்டிக்குள்ளேயே அவரது உடலை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். "உங்க அண்ணனை இப்படி பாக்ஸில் படுக்க வெச்சிருக்கங்களே, அது தப்பில்லையா? மனிதாபம் இல்லையா? என்று கேட்டதற்கு, "என்னய்யா சும்மா தேவையில்லாம கத்திட்டு இருக்கே.. இப்போ போயிடும் உயிர்.. கொஞ்சம் பொறு" என்று தம்பி சரவணன் சொன்ன பதில்தான் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. இதன்பிறகு சூரமங்கலம் போலீசில்
புகார் தந்ததையடுத்து சரவணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.. ஆனால், சரவணன் சற்று புத்திசுவாதீனம் இல்லாதவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, பாலசுப்ரமணியகுமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. ஷாக்.. அண்ணனை சவப்பெட்டியில் அடைத்து.. சாவதற்காக
மணிக்கணக்கில் காத்திருந்த தம்பி.. பாய்ந்தது வழக்கு! இதையடுத்து, தம்பி சரவணன் செய்தது திட்டமிட்டப்பட்ட கொலையா? சொத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டதா? அல்லது உயிருடன் இருந்தபோதே பாலசுப்ரமணிய குமாருக்கு இறப்பு சான்றிதழ் தரப்பட்டதா? என்பன குறித்தெல்லாம் விசாரணை நடந்து வருகிறது. சவப் பெட்டிக்குள் பாலசுப்பிரமணியம் துடிதுடித்த அந்த காட்சியே இன்னும் அகலாத நிலையில், அவரது மரணம் மேலும் அனைவரையும் நிலைகுலைய வைத்து வருகிறது.