கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதி பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – தொற்றால் உயிரிழந்த சோகம்

12 Oct,2020
 

 
 
மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை.
 
கடந்த மார்ச் மாதம் முதல் 200-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், டெல்லியில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இவரால் பெறப்பட்ட உடல்கள், முறையாக நல்லடக்கம் செய்வதை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
 
ஆனால் வைரஸால் இறந்த அவரது உடலை சொந்த குடும்பத்தினரிடம் கூட கொடுக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்கு தூரத்திலிருந்தே அவரின் உடலைப் பார்த்தார்கள் அவரின் குடும்பத்தினர்.
 
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூரில் வசித்து வந்தவர் ஆரிஃப் கான். கொரோனாவில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளுக்கு உடல்களை எடுத்து செல்லுதல், பணஉதவி செய்தல் போன்ற வேலைகளை தனது முழுநேர பணியாக கொண்டு செயல்பட்டார்.
 
இவர் கடந்த மார்ச் முதல், ஆறு மாத காலமாக தன் வீட்டில் இருந்து 28 கி.மீ தொலைவில், அவருடைய ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திலேயே இரவு பகலாக படுத்துறங்கினார்.
 
24வு7 என உழைக்க தொடங்கிய ஆரிஃப் கான், தொலைபேசியின் வாயிலாக மட்டுமே அவரின், மனைவி, குழந்தைகளுடனான தொடர்பை கொண்டிருந்தார்.
 
இவ்வாறு ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட 200 நோயாளிகளின் உடல்களை இவரின் ஆம்புலன்ஸ் வாகனம் சுமந்துள்ளது.
 
இந்நிலையில் 48 வயதானஆரிஃப் கான், திடீர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில் ஆரிஃப் கான் கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.
 
108 ஆம்புலன்ஸ்
இதுகுறித்து அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் கூறுகையில், `என்.சி.ஆரில் இலவச அவசர சேவைகளை வழங்கும் ஷாஹீத் பகத்சிங் சேவா தளத்துடன் இணைந்து பணிபுரிந்த கான், கொரோனா பாதித்த குடும்பத்திற்கு தேவைப்பட்டால், இறந்த உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கு பணமும் அல்லது இறந்தவரின் அருகில் உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் இறுதி சடங்குகளும் செய்வார்’ என்று கூறுகிறார்கள்.
 
ஷாஹித் பகத்சிங் சேவாவின் நிறுவனர் ஜிதேந்தர் சிங் கூறுகையில், “மார்ச் மாதம் முதல் 200 கோவிட் நோயாளிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரிஃப் கான் கொரனோ வைரஸால் இறந்தார்.
 
இவரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மரணமடைந்த ஒவ்வொரு நோயாளிகளின் உடல்களும் முறையாக செல்வதை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
 
அவர் தன் மதம் சார்ந்து இயங்காமல், அனைத்து மத நோயாளிகளின் உடலுக்கும் இறுதி சடங்குகள் செய்தார்.
 
ஆனால் கொரோனா வைரஸால் இறந்த அவரது உடலை சொந்த குடும்பத்தினரிடம் கூட கொடுக்க முடியவில்லை.
 
சில நிமிடங்களுக்கு தூரத்திலிருந்தே அவரது உடலைப் பார்த்தார்கள். அவர் ஒரு ஓட்டுநராக இருந்தபோதிலும், பெரும்பாலும் இறுதி சடங்குகளுக்கு உதவினார்.
 
கான் ஒரு நாளைக்கு 12-14 மணி நேரம் வேலை செய்தார். அதிகாலை 3 மணி வரை கூட அழைப்புகளுக்கு பதிலளித்தார்” என உணர்ச்சி வசப்பட கூறினார்.
 
கானின் மகன் ஆதில் தனது தந்தை குறித்து கூறுகையில், “மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.
 
அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை. அவர்மீது எங்களுக்கு மிக பெரிய அளவில் அக்கறை இருந்தது.
 
அதனால் எப்போதாவது நாங்கள், அவர் இருக்கும் இடம் தேடி சென்று அவரை பார்ப்போம். தந்தைக்கு, கொரோனா மீதும் அச்சம் இல்லை.
 
இயலாதவர்களுக்காவே உழைத்தார். கடைசியாக நாங்கள் அவரை பார்க்கும்போதே அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது” என்றார்.
 
 
 
 
 
அவரின் மற்றொரு மகன் ஆசிப், `எங்களால் அவர் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் எவ்வாறு நான் அவரிடம் பிரியாவிடை பெற முடியும்? அவர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’ என்று துயரத்துடன் கூறினார்.
 
மேலும் ஆரிஃப் கான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அடுத்த நாளே இறந்தது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கான் மட்டுமே அவருடைய குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர், அவருடைய மாத வருமானம் 16,000 ரூபாய். வீட்டு வாடகை 9,000 ரூபாய் என கூறிய அவர் மகன்கள் தங்களால் இயன்ற வேலைக்கு செல்வதாகவும், ஆனால் நிரந்தர வேலை எதும் இல்லை என்றும் கூறினர்.
 
கொரோனா தனது வீட்டிற்கும் பரவும் என்ற அச்சத்தில் தன் இல்லத்திற்கு செல்லாமல் இருக்கும் கானின் சக பணியாளர் ஆனந்தகுமார் கூறுகையில், “ஆரிஃப் கான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார், என்னை சகோதரர் போல் பாவித்தார்” என்றார்.
 
மேலும் “ஆரிஃபுக்கு வேறு எந்த உடல்நிலை குறைபாடும் இல்லை, ஆனால் கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்தது” என்றும் அவர் கூறினார்.
 
கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதி பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - தொற்றால் உயிரிழந்த சோகம்
1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, ஷாஹித் பகத்சிங் சேவா தளம் டெல்லி மற்றும் சுற்றியுள்ள ஏழைகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இரத்த தானம் உட்பட இலவச மற்றும் விரைவாக அணுகக்கூடிய அவசர சேவைகளை வழங்குகிறது. ஆரிஃப் கான் அவர்களுடன் ஆரம்பத்தில் இருந்தே பணியாற்றி வந்தார்.
 
மருத்துவமனைகள் மட்டுமல்ல, காவல் நிலையங்களுக்கும் இவ்வமைப்பு உதவி புரிகின்றனர். அவர்களின் 12 ஊழியர்களில் கான் ஒருவராக இருந்தார்.
 
கடந்த மாதம், குரு தேக் பகதூர் கோவிட் மருத்துவமனையில் இருந்து 300 க்கும் மேற்பட்ட சடலங்களை கொண்டு சென்றமைக்காகவும், குடும்ப உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களின் இறுதி சடங்குகளுக்கு உதவியதற்காகவும் சேவா அமைப்பானது ஆரிஃப் கானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.
 
டெல்லியின் கிழக்கு மாவட்ட நீதிபதி அருண்குமார் மிஸ்ராவும் தொற்றுநோய்களின் போது கானின் பங்களிப்பைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
 
கானின் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாண்டி என்பவர், “செப்டம்பர் 30 அன்று, ஒரு மருத்துவமனையில் கொரோனோ பாதித்த நபரின் உடலை பணம் கட்ட முடியாத காரணத்தினால் அவரின் குடும்பதினரிடம் கொடுக்க மறுத்துவிட்டது.
 
இதில் உதவி புரிந்த கான் உடலை மீட்டு கொடுத்தார்” என கூறியவர், `கான் மாபெரும் மனிதர். அவர் மற்றவர்களிடம் எந்த வித்தியாசமின்றி அக்கறை செலுத்தினார்” என்றார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies