லடாக் எல்லையில் பதற்றம்: இந்தியா – சீனா மீண்டும் பேச்சு!
04 Oct,2020
லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காண்பது குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி இராணுவ கொமாண்டர்கள் மட்டத்தில் இந்தியாவும் சீனாவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலை அடுத்து இருதரப்பும் அங்கு வீரர்களை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இந்த பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் இதுவரை 6 கட்டங்களாக இராணுவ கொமாண்டர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இருப்பினும் லடாக் எல்லையில் பதற்றம் இன்னும் தணியாமல் உள்ளது.
இந்த நிலையில் லடாக்கின் கிழக்கு பகுதியில் எதிர்வரும் 12ம் திகதி இந்திய – சீன இராணுவ உயரதிகாரிகள் நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.