சென்னையில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
02 Oct,2020
கொரோனா தொற்றால் அதிகமாக பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளுக்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது. வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் இன்றைய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த வாரத்தில் சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளே இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில், இன்று புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஆலந்தூரில் 4, கோடம்பாக்கத்தில் 3, சோழிங்கநல்லூரில் 2 வளசரவாக்கத்தில் ஒரு பகுதி என 10 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.