இந்தியாவில் தனது பணிகளை நிறுத்தும் சர்வதேச நிறுவனம்! என்ன காரணம்?
29 Sep,2020
மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் அம்னெஷ்டி இண்டெர்னேஷனல் இந்தியாவில் தனது அமைப்பை நிறுவியுள்ளது. ஆனால் இந்தியாவில் தனது நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் மனித உரிமைகளி தனிக்கவனம் செலுத்திப் பாதிகப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் உரிமைகளை நிலைநாட்டுவதாகவும் அமைந்திருந்த நிருவனம் அம்னெஷ் இண்டெர்னேசனல்.
இந்நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக அயல்நாட்டில் இருந்து பணம் பெற்றுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.
அத்துடன் அந்தப் பணத்தைப் பெற்றதையும் பதியவில்லை எனக் கூறியதுடன் அந்நிறுவனத்திற்குரிய கணக்குகளையும் முடக்கிய நிலையில் இனிமேல் இந்தியாவில் தனது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகக் கூறி அம்னெஷ் இண்டர்னேஷனல் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாகக் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.