நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
29 Sep,2020
கொரோன சோதனை எடுப்பதற்கும் முடிவு கிடைப்பதற்கும் நீண்ட இடைவெளிகளி கொரோனா வைரஸின் பரவல் அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சோதனை முடிவுகள் உடனடியாக கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இந்தியா மற்றும் மெக்சிகோ உட்பட அதிக நோய்த்தொற்று விகிதங்களைக் கொண்ட சில நாடுகளில், குறைந்த சோதனை விகிதங்கள் அவற்றின் வெடிப்பின் உண்மையான பரவலை மறைக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயை நிமிடங்களில் கண்டறியக்கூடிய ஒரு சோதனை கருவிகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பாதிப்புகளை கண்டறியும் திறனை வியத்தகு முறையில் விரிவுபடுத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கு பதிலாக 15-30 நிமிடங்களில் முடிவுகளை வழங்கும் புதிய, மிகவும் சிறிய மற்றும் பயன்படுத்த எளிதான சோதனை கருவிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
மருந்து உற்பத்தியாளர்கள் அபோட் மற்றும் எஸ்டி பயோசென்சர் ஆகியோர் 12 கோடி சோதனை கருவிகளைகளை தயாரிக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
இந்த ஒப்பந்தம் 133 நாடுகளை உள்ளடக்கியது, இதில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளும் அடங்கும், இது தற்போது இறப்பு மற்றும் தொற்று விகிதங்களின் அடிப்படையில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியமாக உள்ளது.
"இது அவர்களின் சோதனைத் திறனுக்கு ஒரு முக்கிய திருப்பமாக அமையும், மேலும் அதிக அளவில் பரவும் பகுதிகளில் இது மிகவும் முக்கியமானது என கூறினார்.