நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி!
28 Sep,2020
நடிகர் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வரும் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆவேசமாக தனது சமூக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
ஆனால் சீமான் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று உள்ளார் என்றும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில் சீமானுக்கு என்ன ஆச்சு என்பது குறித்த கேள்விகளைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்கள் மூலம் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது