சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
19 Sep,2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்ததாலும், வேலைக்கானஅனுமதி காலம் முடிந்துவிட்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்ட 450 இந்தியர்கள், சவுதியில் பிச்சையெடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை பிடித்து தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
தடுப்பு முகாமில் உள்ளவர்களில் 39 பேர் உ.பி., மாநிலத்தையும், 10 பேர் பீஹார், 5 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா, காஷ்மீர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தலா 4 பேர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஒருவரும் அடங்குவார்கள். மற்றவர்கள் கர்நாடகா, ஹரியானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள், வேலைக்கான அனுமதி காலம் முடிந்ததை தொடர்ந்து, அங்கு பிச்சையெடுத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, வாடகை அறைகளில் தங்கியிருந்த அவர்களை கைது செய்த அதிகாரிகள், ஜெட்டாவில் உள்ள ஷமைசி தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர் .
தாங்கள் நம்பிக்கையில்லாத சூழ்நிலையில் உள்ளோம். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. எங்களது வேலையை இழந்துவிட்டதால், பிச்சையெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால், தற்போது தடுப்புமுகாமில் வேதனையுடன் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்