ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்
18 Sep,2020
பாரத் ஸ்டேட் வங்கி மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு ஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி நடைமுறையை அமல்படுத்த உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் ஏடிஎம்க்கு செல்லும் நிலை மாறி, செல்போன் மூலமாகவே பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி
பெரும்பாலான மக்கள் தங்களது செல்போன் மூலமாகவே பணபரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இவ்வாறு நவீன காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் புது புது டெக்னிக் பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக மக்கள் ஏடிஎம்மை பயன்படுத்தும் போது, அவர்களையே அறியாமல் பாஸ்வோர்டுகளை கண்டுபிடித்து வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் சம்பவம் அதிகரிக்கிறது.
அதாவது, ஏடிஎம்மில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க OTP நடைமுறை அமல்படுத்த உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனுக்கு வரும் OTP பயன்படுத்தியே பணம் எடுக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், வரும் 18 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் ஏடிஎம்க்கு சென்றால் செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது.