இந்திய எல்லை மோதலுக்கு திட்டமிட்டவர் சீன அதிபரே; மற்றொரு தாக்குதலுக்கு உத்தரவிடுவார்-அமெரிக்க பத்திரிகை எச்சரிக்கை
14 Sep,2020
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கு எதிரான சீன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டவர் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு முன்னணி அமெரிக்க பத்திரிகை குறிப்பிட்டுள்ளதுடன். அவர்களின் தோல்வியுற்ற உயர்மட்ட ஊடுருவல்கள் 'விளைவுகளை' ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் நியூஸ் வீக்கில் வெளியிடப்பட்ட கட்டுரையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சீன அதிபர் லடாக்கில் உள்ள இந்திய நிலைகளுக்கு எதிராக "மற்றொரு மிருகத்தனமான தாக்குதலை தொடங்க சீன ராணுவத்திற்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக ஜியைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்குள் செயல்படுத்த நினைத்த ஆக்கிரமிப்பு நகர்வுகள் மற்றும் அவரது இராணுவம் (பி.எல்.ஏ) எதிர்பாராத விதமாக தோல்வியடைந்துள்ளது. இந்திய எல்லையில் சீன இராணுவத்தின் தோல்விகள் விளைவுகளை ஏற்படுத்தும்.
சீன ராணூவத்தின் தோல்வி, கட்சியில் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவரான ஜிக்கு, எதிரிகளை அகற்றி, ராணுவத்தில் தனது விசுவாசிகளை நியமிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சீன இராணுவம் அசல் கட்டுப்பாட்டு வரிசையில் (எல்.ஐ.சி) பின்வாங்குவதாகவும், சீனப் அதிபரை இந்தியப் படைகள் மீது மற்றொரு தாக்குதலைத் தொடங்க ‘தூண்டுகிறது’ என்றும் அந்த கட்டுரை எச்சரித்து உள்ளது.
அதே நேரம் அந்த பத்திரிகை சீனாவின் ரானூவத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியப் படைகளை பாராட்டி உள்ளது.