கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி.. மண்ணுக்கு உள்ளே மாபெரும் வரலாற்று
12 Sep,2020
மதுரை வடக்குமாசி வீதியில் கால்வாய் தோண்ட குழி தோண்டிய போது கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் காலம் ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உலகின் மிகவும் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. பல நூறு வருடங்களுக்கு முன்பே மதுரை முறையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் ஆகும். மதுரையை பிரித்து வைத்துவிட்டு இந்திய
வரலாற்றை எழுத முடியாது. மதுரை குறித்து சங்ககால தமிழ் குறிப்புகளில் நிறைய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. சீனா தொடங்கி பல வெளிநாட்டின் பண்டைய கால குறிப்புகளில் கூட மதுரையை குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் ஓகே.. மாநிலம் விட்டு மாநிலம் எப்போது பேருந்து?.. முதல்வர் விளக்கம் என்ன இந்த நிலையில்தான் மதுரை வடக்குமாசி வீதியில் கால்வாய் தோண்ட குழி தோண்டிய போது கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் காலம் ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திற்கு ஆளாக்கி உள்ளது. அங்கு சாலையை சரி செய்யும் பணிகள் நடந்து வந்தது. அப்போது வடக்குமாசி வீதியில் கால்வாய்
தோண்டுவதற்காக 2 அடி வரை குழி தோண்டி உள்ளனர். குழி தோண்டினார்கள் அந்த சாலை முழுக்க பல இடங்களில் இப்படி குழி தோண்டி உள்ளனர். இந்த நிலையில் ராமாயணச்சாவடி- தளவாய் அக்ரஹாரம் தெரு பகுதியில் மூன்று இடங்களில் குழி தோண்டப்பட்டுள்ளது. சண்முகம் மருத்துவமனை அருகே குழி தோண்டிய போதுதான் அந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. கடப்பாரையை வைத்து அந்த இடத்தில குழி தோண்டிய போது, உள்ளே பெரிய கல் இருந்துள்ளது. உடைக்க முடியவில்லை கடப்பாரையை வைத்து இதை அகற்ற முயன்று உள்ளனர்.
ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொறுமையாக மண்ணை எடுத்துவிட்டு கல்லை வெளியே எடுத்து பார்த்துள்ளனர். அப்போதுதான் உள்ளே இருந்தது கல்வெட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தொல்லியல் துறையினர் கல்வெட்டை ஆராய்ச்சிக்காக எடுத்து சென்றனர். காலம் என்ன இந்த கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் பல வரலாற்று தகவல்கள் கிடைத்து இருக்கலாம். மதுரை குறித்த பல உண்மைகள், சுவாரசியங்கள் இதில் இருக்கலாம் என்கிறார்கள். எப்போது வைக்கப்பட்டது இங்கு பெரிய கோட்டை இருந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கோட்டையின் அருகே இருந்த கல் வெட்டாக இது இருக்கலாம், கோட்டை குறித்த குறிப்புகள் இதில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மதுரையை மாறவா்ம குலசேகர பாண்டிய மன்னன் ஆண்ட காலத்தில் இந்த கல்வெட்டு செய்யப்பட்டு இருக்கலாம். இது மிகவும் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளனர்.