இந்தியா - சீனா இடையேயான பதற்றத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் போடும் சதித்திட்டம்: வெளியான திடுக்கிடும் தகவல்!
07 Sep,2020
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்திலும் 40 பேர் வரை பலியாகினர் என கூறப்பட்டது. எனினும் சீனா இதனை மறுத்தது. சீனா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே லடாக் எல்லை கோட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை பயன்படுத்தி அண்டை நாடான பாகிஸ்தான், தனது நாட்டில் இருந்து பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் இந்திய எல்லைக்குள் எல்லை கோட்டு பகுதி வழியே ஏறக்குறைய 400 பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. இதற்காக எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வெவ்வேறு இடங்களில் இந்த பயங்கரவாதிகள் ஒன்று கூடியுள்ளனர். அவர்கள் எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தானின் ராணுவம் உதவி புரிந்துள்ளது.
சமீப காலங்களில், இந்தியாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. சில வீரர்களையும் இதற்காக பலி கொடுத்துள்ளது.
இதேபோன்று, இந்திய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்த எல்லை அதிரடி படையையும் பாகிஸ்தான் ராணுவம் தூண்டி விட்டுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அடுத்துள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் பயங்கரவாதிகள் பலர் சுற்றி வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
அவர்கள் இந்தியாவின் குரெஜ், மச்சல், கெரான், தங்தார், நவ்காம் ஆகிய பிரிவுகளிலும், உரி, பூஞ்ச், பிம்பர் காலி, கிருஷ்ணா பள்ளத்தாக்கு, நவ்ஷெரா, அக்னூர் மற்றும் திராஸ் பிரிவுகளிலும் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
எனினும், இந்திய ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிர உஷார் நிலையில் உள்ளது. இதனால் ஊடுருவலில் ஈடுபடுவதற்காக புதிய வழிகளை பயங்கரவாதிகள் தேடி கொண்டு இருக்கின்றனர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.