எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா!
03 Sep,2020
இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பிற்காக பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவதாகவும் பதுங்கு குழிகள் பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.