ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக்கோரி சீமான் போராட்டம்!
28 Aug,2020
செங்கொடி நினைவு நாளை முன்னிட்டு ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. 7 பேர் விடுதலைக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கிய செங்கொடி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செங்கொடி படத்திற்கு மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, செங்கொடியின் பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், 7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவதே செங்கொடியின் கனவாக இருந்தது. ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர்.
அளுநருக்கு அழுத்தம் கொடுத்து 7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் நாம் தமிழர் - மகளிர் பாசறை முன்னெடுத்த பதாகை ஏந்தும் போராட்டம்.#WeDemand7TamilsRelease pic.twitter.com/B6XOWrCR2v— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) August 28, 2020
ஆளுநர் இருக்கை என்பது இரக்கமற்ற இதயம் கொண்டவர்களின் இருக்கை. ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகளின் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது என கூறினார்.