கைலாசா நாட்டிற்கு 3 ஊரைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை - நித்யானந்தாவின் கலகலப்பான உரை
23 Aug,2020
ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக கூறி வருகிறார்.
கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் நித்யானந்தா.
இதற்கிடையே, கைலாசா நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஒட்டல் அதிபர் ஒருவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேரலையில் தோன்றி பேசிய நித்யானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன். சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது என சிரித்தவாறு தெரிவித்தார்.