சென்னை; 'உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு, ஊரடங்கு நேரத்தில், மின் வாரியம் விதித்த கேட்புக் கட்டணம் மற்றும் இழப்பீடு கட்டணம் சட்ட விரோதமானது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், 'மின் வாரியம் விதித்துள்ள, 90 சதவீத கேட்புக் கட்டணத்தை வாபஸ் பெற்று, 20 சதவீத கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.சட்ட விேராதமானது'வசூலித்த அதிகபட்ச தொகையை திருப்பித் தரவோ, வரும் காலங்களில் சரி செய்யவோ வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு இழப்பீடு கட்டணம் விதிக்கக் கூடாது' எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, தியேட்டர் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு :தொழிற்சாலைகள் தரப்பில், மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்த போது, ஒழுங்குமுறை விதிகளை பரிசீலித்து, குறைந்தபட்ச கட்டணத்தை வசூலித்திருக்க வேண்டும்.வாரியத்துக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது போல் சித்தரிக்க முயற்சி நடக்கிறது.அதற்கு, எந்த அர்த்தமும் இல்லை. மின்சார வழங்கல் விதிகளை முற்றிலும் புறக்கணித்து, அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்க, மின் வாரியத்தை அனுமதிக்க முடியாது.
வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் என்பதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், ஊரடங்கு காலத்தில், நுகர்வோருக்கு அதிகபட்ச கேட்பு கட்டணம் விதித்தது சட்டவிரோதமானது.அதிக கட்டணத்தை அனுமதித்தால், தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூட வழி வகுத்து விடும். ஊரடங்கால், ஏற்கனவே நிதி நெருக்கடியைதொழிற்சாலைகள் சந்தித்து வருகின்றன.
அதோடு, மின் வாரியம் அதிக கட்டணத்தை விதித்தால், அதுவும் தொழிற்சாலைகளுக்கு பெரிய சவாலாகி விடும்.நிதி நெருக்கடிமின் வாரிய செயல்பாட்டால், தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடும் என்பதை உணர வேண்டும். தொழிற்சாலைகள் மூடப்பட்டால், கடைசியில், வாரியத்துக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விடும். இது, தங்க முட்டை இடும் வாத்தை, மின் வாரியம் கொல்வதற்கு சமம்.எனவே, அதிகபட்ச கேட்பு தொகை மற்றும் இழப்பீடு கட்டணம் விதிப்பது, சட்டவிரோதமானது.
மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நாட்களை கருதி, புதிய மின் கட்டண ரசீதை, வாரியம் வழங்க வேண்டும்.மனுதாரர்களிடம் இருந்து, ஏற்கனவே முழு கட்டணமும் வசூலிக்கப்பட்டிருந்தால், கூடுதல் கட்டணத்தை வரும் காலங்களில் சரி செய்து கொள்ள வேண்டும்.
ஊரடங்கு காலத்துக்கு, இழப்பீடு கட்டணமும் வசூலிக்கக் கூடாது; வசூலித்திருந்தால், வரும் காலங்களில் அதை சரி செய்ய வேண்டும். அரசு உத்தரவால், எந்த தொழிற்சாலையாவது தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், ஊரடங்கு நீங்கும் வரை, குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.