தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து 31ம் தேதி வரை நீட்டிப்பு
15 Aug,2020
சென்னை : தமிழகத்தில் சிறப்பு ரயில் ரத்து 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி -- செங்கல்பட்டுக்கு விருத்தாசலம் வழியாக தினமும் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி ரயிலும் திருச்சியில் இருந்து தஞ்சை மயிலாடுதுறை வழியாக செங்கப்பட்டுக்கு இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும் இன்று வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் ரத்து வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை -- விழுப்புரம் கோவை -- அரக்கோணம் கோவை -- காட்பாடி திருச்சி - நாகர்கோவில் இடையே தினமும் இயக்கப்பட்ட சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி ரயில்கள் ரத்தும் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை -- மயிலாடுதுறை இடையே வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் ஜனசதாப்தி சிறப்பு ரயிலும் வரும் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் ராஜ்தானி சூப்பர் பாஸ்ட் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து இயக்கப்படும். 'ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணியர் நிலைய கவுன்டர்களில் ஆறு மாதங்களுக்குள் கட்டணத்தை திரும்ப பெறலாம்' என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.