தேசிய கொடியை ஏற்றி வைத்து மோடி மரியாதை
15 Aug,2020
இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று(ஆக.,15) டில்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டு எளிய முறையில் நடைபெற்றது. முக்கிய விவிஐபி.,க்கள் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அனைத்து நுழைவு வாயில்களிலும், தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. 7வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது
முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செங்கோட்டையின் லாகூர் கேட்டிற்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வந்த பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு செயலர் அஜய்குமார் வரவேற்றனர். முப்படைகள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.,
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.