ஒரு பேஸ்புக் போஸ்ட்.. பெங்களூரில் சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு.. 2 பேர் பலி.. பரபரப்பு.. என்ன நடந்தது
12 Aug,2020
ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக பெங்களூரில் இருக்கும் இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு சூறையாடப்பட்டு அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் புலிகேசி நகரை சேர்ந்தவர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி. இவரின் வீடு பெங்களூரில் இருக்கும் காவல் பைசந்திரா என்ற பகுதியில் இருக்கிறது. இவர் வீடு மீதுதான் நேற்று இரவு வன்முறையாளர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வன்முறைக்கு பின் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் போஸ்ட்தான் காரணம் என்கிறார்கள். இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை இவர் போஸ்ட் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
நவீன் செய்த பேஸ்புக் போஸ்ட் குறித்து முதலில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் இந்த புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்ய முடியாது. நீங்கள் இதை பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று போலீசார் அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோபம் அடைந்த மக்கள் அந்த போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கிருந்த பைக்குகள், போலீஸ் வாகனங்களை கற்களால் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு மீதும் வன்முறையாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்