கொரோனா: இந்தியாவில் ஒரேநாளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 875 பேர் உயிரிழப்பு
09 Aug,2020
இந்தியாவில் மிகவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 65 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.
அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரேநாளில் 875 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்த தொற்றுக்கு உள்ளான ஆறு இலட்சத்து 28ஆயிரத்து 763 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 999பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மேலும் இதுவரை 14இலட்சத்து 79 ஆயிரத்து 804பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக தொடர்ந்தும் மகராஷ்டிரா, தமிழகம் ஆகியன விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.