கொரோனா வைரஸ் : நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால அளவு உயர்வு!
31 Jul,2020
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால அளவு 21 நாட்களாக உயர்வடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 64.54 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் ஒரு பக்கம் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்து 079 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 16 இலட்சத்து 38 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 318 ஆக உள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் குணமடைவோர் விகிதமும் மெல்ல உயர்ந்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளதது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.