கேரளா,கர்நாடகாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்:ஐ.நா.,அதிர்ச்சி தகவல்
28 Jul,2020
ஐ.எஸ்.ஐ.எஸ்,அல்குவைதா மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தகார் மாகாணங்களை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் இந்திய துணை கண்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் அந்த இயக்கத்திற்கான தலைவர் ஓசாமா மஹ்மூத். இந்த இயக்கத்தில் வங்கதேசம் , பாகிஸ்தான், மியான்மர் நாடுகளை சேர்ந்த150 முதல் 200 பேர் வரையில் உறுப்பினர்களாக உள்ளனர் இந்த இயக்கத்தின் முன்னாள் தலைவர் அசிம் உமர் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதற்காக ஐ.எஸ்.ஐ.எல் இயக்கத்தின் பெயராக விலாயா ஆப் ஹிந்த்( இந்திய மாகாணம்) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான ஐ.எஸ்.ஐ.எல் செயல்பாட்டாளர்கள் உள்ளனர் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.