பப்ஜி உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை?
28 Jul,2020
தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு குளோன் ஆக செயற்பட்டு வந்த, மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசு தடை விதித்தது.
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 69 ஏ’யின் கீழ் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், TikTok, SHAREit, UC Browser, CamScanner, Helo, WeChat உள்ளிட்ட முக்கிய செயலிகள் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் அந்த 59 செயலிகளுக்கும் குளோன் ஆக செயற்பட்டதாக மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் ஏதும் இதுவரையில், வெளியிடப்படவில்லை.
ஆன்லைன் கேமிங் சீன செயலியான பப்ஜி உள்ளிட்டவையும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் 250 சீன செயலிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.