கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய புதிய கருவி : இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா!
28 Jul,2020
கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் நோக்கில் இஸ்ரேலுடன் இணைந்து புதிய கருவியை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த கருவியின் மூலம் 30 வினாடிகளில் முடிவினை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் சமூக பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
இதன்காரணமாக துரித கதியில் கண்டறியும் பரிசோதனை கருவியை உருவாக்குவதில் மத்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இஸ்ரேலிய நிபுணர் குழுவினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இதற்காக இஸ்ரேலிய உயர் மட்ட நிபுணர் குழு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.