10 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இண்டிகோ முடிவு
21 Jul,2020
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ தனது ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுளதால் பெரும்பாலான ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமாக இண்டிகோவும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
23 ஆயிரத்து 500-க்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு கட்டயா விடுப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வரும் அந்நிறுவனம் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை (சுமார் 2 ஆயிரத்து 300 பேர்) பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால் இண்டிகோ வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைமை இயக்குனர் ரோனோஜாய் தத்தா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தங்கள் நிறுவன விமானத்தில் பயணம் செய்யும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு சலுகையாக பயணத்தொகையில் 25 சதவிகிதம் சலுகையை இண்டிகோ அறிவித்துள்ளது.
இந்த சலுகை இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையால் இண்டிகோ நிறுவனத்திற்கு இதுவரை 871 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்